Home /News /national /

பெகாசஸ் வழக்கு விசாரணையில் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை - நிபுணர் குழு அறிக்கையில் தகவல்

பெகாசஸ் வழக்கு விசாரணையில் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை - நிபுணர் குழு அறிக்கையில் தகவல்

 பெகாசஸ் வழக்கில் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கை

பெகாசஸ் வழக்கில் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கை

பெகாசஸ் விவகாரத்தில் புலன் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அறிக்கையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்னவ், பிரஹலாத் பட்டேல் மற்றும் 400 பத்திரிகையாளர்களின் தொலைபேசியை இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு கருவி மூலம் ஒட்டுக்கேட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி இந்து குழும தலைவர் என். ராம், ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னிலம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சஷி குமார் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் நடைபெற்று வந்தது. பெகாசஸ் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய, 3 குழுக்களை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    சைபர் பாதுகாப்பு, இணைய தடயவியல், மற்றும் வன்பொருள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற மூன்று பேர் அடங்கிய குழு, பெகாசஸ் ஸ்பைவேர் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா என்பதை "விசாரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. விசாரணையை, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த குழுக்கள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. தொழில் நுட்ப குழுவின் 2 அறிக்கைகளும், கண்காப்பு குழுவின் ஒரு அறிக்கையும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பறிபோகும் ஜார்கண்ட் முதல்வர் பதவி.. ஹேமந்த் சோரேனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

    கண்காணிக்கப்பட்டதாக கூறப்பட்ட 29 போன்களில், ஐந்தில் உளவு மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அது பெகாசஸ் தான் என்று உறுதியாக கூறமுடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைக் குழுவிற்கு மத்திய அரசு சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் கூறினார்.3 அறிக்கைகளில் ஒன்றில், தனிநபர் சுதந்திரத்தை காக்க, சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி, ரவீந்திரன் பரிந்துரைத்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Supreme court, Union Govt

    அடுத்த செய்தி