நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் நடைபெறும். ஆனால் குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான தேர்தல், புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தாண்டு டிசம்பர் மாதம் குளிர் காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் டிசம்பர் 29ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக நடைபெற இருக்கிறது.
பொதுவாக கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவது மரபாக உள்ளது. இதில் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகள் கோரிக்கை, நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்நிலையில், இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சியின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு நாடியுள்ளது. இதற்காக வரும் 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
டிசம்பர் 6ஆம் தேதி 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. ஆனால், இறுதி கட்ட பணிகள் இன்னும் முடியாததால் குளிர்காலக் கூட்டத்தொடரை தற்போதைய கட்டடத்தில் நடத்தி, பட்ஜெட் கூட்டத்தொடரை புதிய கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parliament, Parliament Session