• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் நிலக்கரிக்கான ரூ.20,000 கோடி தரவில்லை - மத்திய அரசு குற்றச்சாட்டு

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் நிலக்கரிக்கான ரூ.20,000 கோடி தரவில்லை - மத்திய அரசு குற்றச்சாட்டு

நிலக்கரி

நிலக்கரி

தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் கோல் இந்தியா நிறுவனத்திடம் பெற்ற நிலக்கரிக்கான 20 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் உள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், நிலக்கரி கொள்முதலுக்கான நிலுவைத்தொகை 19,900 கோடி ரூபாயை செலுத்தவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு மட்டும், 1,087 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

    போதுமான நிலக்கரி கையிருப்பை உறுதி செய்வது மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து, ஜனவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    எனினும் பத்து மாநிலங்களுக்கும் கோல் இந்தியா நிறுவனத்தில் இருந்து, தொடர்ந்து நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    சொந்த சுரங்கங்களை கொண்டுள்ள ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்கள், கொரோனா மற்றும் மழையை காரணம் காட்டி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

    அடுத்த 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இரண்டு வாரங்களில் வெட்டி எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    நிலக்கரி உற்பத்தி குறைந்ததன் எதிரொலியாக, பஞ்சாபில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கு திங்கள் கிழமை முதல் 7 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபில் நாளென்றுக்கு 11,046 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், கடந்த இரண்டு நாள்களாக 8,750 மெகாவாட் மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது.

    இதனிடையே, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது ஆதாரமற்றவை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா மின்மிகை நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: