ஹோம் /நியூஸ் /இந்தியா /

“கொரோனா வச்சு சாக்கு சொல்றாங்க.. யாத்திரையை கலைக்க பாஜக திட்டம்..” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

“கொரோனா வச்சு சாக்கு சொல்றாங்க.. யாத்திரையை கலைக்க பாஜக திட்டம்..” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

தன்னை எதிர்ப்பவர்களை மோடி எதிர்கொள்ளாமல் வேறு திசையில் ஓடி விடுகிறார். - ராகுல் காந்தி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India

தேச ஒற்றுமை யாத்திரையை நிறுத்த கொரோனாவை வைத்து மத்திய அரசு சாக்கு போக்கு கூறுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேச ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தனது பயணத்தை தொடங்கினார். தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை கடந்துள்ள ராகுல்காந்தி பாரதிய ஜனதா கட்சி ஆளும் ஹரியானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு பேசிய ராகுல், கொரோனாவை காரணம் காட்டி தேச ஒற்றுமை யாத்திரையை நிறுத்த மத்திய அரசு சாக்கு போக்கு கூறுவதாக சாடியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் வெறுப்புணர்வு நிறைந்த நரேந்திர மோடியின் இந்தியா தேவையில்லை என்றும், நாடு முழுக்க அவர்கள் அச்சத்தை பரப்பி வருவதாகவும் ராகுல் விமர்சித்தார். ரபேல், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசினால் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கவே மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

தன்னை எதிர்ப்பவர்களை மோடி எதிர்கொள்ளாமல் வேறு திசையில் ஓடி விடுவதாகவும், அந்த களத்திலேயே நிற்பதில்லை என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

First published:

Tags: Congress, PM Modi, Rahul gandhi