கொரோனாவுக்கான அவசர தடுப்பு மருந்தாக கோவிஷீல்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் தகவல்

கொரோனாவுக்கான அவசர தடுப்பு மருந்தாக கோவிஷீல்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் தகவல்

கோவிஷீல்டு

இந்தியாவில் கொரோனாவுக்கான அவசர மருந்தாக கோவிஷீல்டு-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை 6 நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்டு, பைசர் நிறுவனத்தின் மருந்து மற்றும் இந்தியாவிலேயே தயாரான கோவேக்சின் ஆகிய மருந்துகள் அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் கோரியிருந்தன. இந்நிலையில் இந்த 3 மருந்துகள் குறித்து இறுதி முடிவெடுக்க நிபுணர் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

  பின்னர் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருந்தான கோவிஷீல்டு மருந்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரை செய்திருந்தது.

  இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: