நவம்பர் மாதத்துக்கு புதிதாக எந்த ஊரடங்கு தளர்வுகளும் இல்லை - மத்திய அரசு

நவம்பர் மாதத்துக்கு புதிதாக எந்த ஊரடங்கு தளர்வுகளும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நவம்பர் மாதத்துக்கு புதிதாக எந்த ஊரடங்கு தளர்வுகளும் இல்லை - மத்திய அரசு
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதல் 40 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதன்பிறகு, மாதாமாதம் தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. தற்போது பெரும்பாலான செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிக அளவில் கூட்டம் கூடும் சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்துவருகிறது. திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, மால்கள் உள்ளிட்டவை பல கடந்த மாதம் முதலே கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டுவந்துள்ளன. இன்னும் 3 தினங்களில் இந்த மாதம் முடிவடையவுள்ளநிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘செப்டம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்பட்ட தளர்வுகள் நவம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். புதிய தளர்வுகள் ஏதும் கிடையாது’என்று அறிவித்துள்ளது.


கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30-ம் தேதிவரை கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எல்லைகளை அளவை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கின்றன.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading