மோடி, சீன அதிபர் சந்திப்பு விவகாரம்! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மோடியின் அழைப்பை ஏற்று, அக்டோபர் 11-12-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட நட்பு ரீதியான சந்திப்புக்காக ஜீ ஜின்பிங் சென்னை வருகை தரவுள்ளார்.

news18
Updated: October 10, 2019, 3:01 PM IST
மோடி, சீன அதிபர் சந்திப்பு விவகாரம்! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரதமர் மோடி | அதிபர் ஜீ ஜின்பிங்
news18
Updated: October 10, 2019, 3:01 PM IST
சீன அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், 11 மற்றும் 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் வைத்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தவுள்ளார். அதற்காக, மாமல்லபுரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. மேலும், மாமல்லபுரம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது மத்திய அரசு சார்பில் ஜீ ஜின்பிங் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’2018-ம் ஆண்டு ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் சீனாவின் யூஹான் பகுதியில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் அதிபர் சந்திப்பு நடைபெற்றது. தற்போது, மோடியின் அழைப்பை ஏற்று, அக்டோபர் 11-12-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட நட்பு ரீதியான சந்திப்புக்காக ஜீ ஜின்பிங் சென்னை வருகை தரவுள்ளார்.


இந்தச் சந்திப்பின்போது, இருநாட்டின் விவகாரங்கள் குறித்தும், பிராந்தியப் பிரச்னைகள் குறித்தும், உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்தியா, சீனா இணைந்து வளர்ச்சிக்கான பாதையில் செயல்படுவது குறித்தும் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...