முகப்பு /செய்தி /இந்தியா / ஐ.ஐ.டி, எய்ம்ஸ் அமைக்கத் திட்டம்: ஜம்மு காஷ்மீருக்கு ரூ.80,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

ஐ.ஐ.டி, எய்ம்ஸ் அமைக்கத் திட்டம்: ஜம்மு காஷ்மீருக்கு ரூ.80,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பணிக்காக 80,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கியது. ஜம்மு, லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தகவல் தொடர்பு துண்டிப்பு, அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பின்னர் படிப்படியாக இயல்பு நிலைமை திரும்பி வரும் நிலையில் அங்கு செல்போன் சேவை வழங்கப்பட்டு வருகிறது.  சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அங்கு இணையவசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு காஷ்மீருக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை திட்டமிட்டுள்ளது. இதற்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மின்சார உற்பத்தி, நீர்பாசனத் திட்டம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Also see:

First published:

Tags: Jammu and Kashmir