ஊரகப் பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துங்கள் - மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மாதிரி படம்

ஊரக பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுதுதவருகின்றன.

  இந்தநிலையில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘ஊரகப் பகுதிகளில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் வகையிலான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும். கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தவும், சுகாதரத்துறையிடம் ஆலோசனை பெற்று ஊரக பகுதிகளில் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

  மேலும், ஊரகப் பகுதிகளில் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்தலாம் எனவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஊரக பகுதிகளில் தகவல்தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு, நலிவுற்றுள்ள மக்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் உரிய ரேஷன் பொருட்கள், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றை உறுதிபடுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: