Home /News /national /

விவசாயத்தில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்

விவசாயத்தில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

செயற்கை ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் விவசாயத்தில் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
    இயற்கை முறை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயம் சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

    “தற்போது செலவில்லா விவசாயம் என்ற இயற்கை முறை சாகுபடி ஆந்திரப்பிரதேசத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    செயற்கை ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் இவ்வகை விவசாயத்தில் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    மேலும் புதிதாக 10,000 விவசாய உற்பத்தி அமைப்புகள் அமைக்கப்படும் என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், இந்தியா உணவுத்துறையில் தன்னிறைவு பெற விவசாயிகளே காரணம் என புகழ்ந்தார்.

    விவசாயத்தில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், விவசாயப் பொருட்களில் மதிப்புகூட்டும் தொழில்களை ஊக்கப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Union Budget 2019

    அடுத்த செய்தி