ஹோம் /நியூஸ் /இந்தியா /

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும் படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் குணமடைந்து வீடு திரும்பினார்.

63 வயதாகும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டார். இந்த நிலையில் நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மதியம் 12 மணிக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். . நெஞ்சு எரிச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில், தற்போது அவர், குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இருப்பினும் அவரை சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் பிப்ரவரி 1-ந் தேதி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: AIIMS Hospital, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN