Home /News /national /

உங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள்.. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிக்காக மின்துறை கடனில் மூழ்குவதா? - நிர்மலா சீதாராமன் கேள்வி

உங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள்.. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிக்காக மின்துறை கடனில் மூழ்குவதா? - நிர்மலா சீதாராமன் கேள்வி

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிதியை பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் அதை மக்கள் தங்கள் உரிமையாக கருதிக்கொள்ள கூடாது என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    இலவசங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் அதுதொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் எழத்தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலவசத் திட்டங்கள் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், தேர்தலில் இலவசத் திட்டங்கள் தொடர்பாக வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தங்கள் பட்ஜெட்டில் இருந்து மட்டுமே நிதியை ஒதுக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என தெரிவித்தார்.

    உதாரணத்திற்கு இலவச மின்சாரம் என அறிவிக்கும் அரசியல் கட்சிகள், அதற்கான செலவு, இழப்பு ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கான தொகையை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டும் என கூறினார். தற்போது பல மாநிலங்கள் இலவச மின்சாரம் கொடுத்து வருவதாகவும் அதற்கான கடன் சுமையை மாநில அரசுகள் ஏற்காததால், மின்துறை நிறுவனங்கள் கடனை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    இதை வாசிக்க: ‘காங்கிரஸ் கட்சியின் படு தோல்விகளுக்கு ராகுல்தான் காரணம்’ – குலாம் நபி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டு

    இதனை தொடர்ந்து பேசிய அவர், மின் துறை நிறுவனங்கள் மக்களை சந்தித்து வாக்கு கேட்கவில்லை, தேர்தலை சந்திக்கவில்லை, அவர்கள் ஏன் கடனை சுமக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிக்காக மின் துறை கடனில் மூழ்கியிருப்பதாக தெரிவித்தார்.

    இலவசங்கள் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் அதற்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். நிதியை பயன்படுத்தி மக்களுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் அதை மக்கள் தங்கள் உரிமையாக கருதிக்கொள்ள கூடாது என தெரிவித்தார்.

    இலவசங்கள் தொடர்பான விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் இந்த விவாதத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் கூறினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Nirmala Sitharaman

    அடுத்த செய்தி