பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால், ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தையும், உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

  கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பான்மையான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும், தொற்று பரவல் கட்டுக்குள் வரவில்லை. அவ்வப்போது, மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

  அத்துடன், நாடு முழுவதும் தடையின்றி ஆக்சிஜன் விநியோகிப்பது, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
  Published by:Vijay R
  First published: