பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உள்ள நிலையில், இன்று மாலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
நாடாளுமன்றம்
  • News18
  • Last Updated: May 24, 2019, 6:02 PM IST
  • Share this:
டெல்லியில் பிரதமர் மோடி தலைமைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உள்ள நிலையில், இன்று மாலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.


இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். புதிய ஆட்சி அமைப்பது, பதவியேற்பு விழா உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த அமைச்சரவையின் கடைசி கூட்டம் இதுதான்.

Also see:

First published: May 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading