பூச்சிக்கொல்லி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பூச்சிக்கொல்லி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அமைச்சரவை கூட்டம்
  • News18
  • Last Updated: February 13, 2020, 9:03 AM IST
  • Share this:
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதேபோல, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு 2, 500 கோடி ரூபாய் நிதி வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், வரிவிதிப்பு தொடர்பாக கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையிலான மசோதாவில் மாற்றங்களைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதன்படி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் தீர்வுகாண வழிவகை செய்யப்படுகிறது.


ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், தேசிய காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா ஆகிய மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மூலதன நிதி வழங்கவும் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. காப்பீட்டு நிறுவனங்களின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், விவசாயிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் கிடைக்கும் என்றும், நாட்டில் இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகளை ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தியா, இலங்கை இடையேயான இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்தது.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading