பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி!

இந்தக் கூட்டத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி கொள்முதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் குறைந்து வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் 1,27,510 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையாகும். தொடர்ந்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வரையில் 21,60,46,638 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  இதனிடையே, நாட்டில் நிலவிவரும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் குழப்பம் குறித்து உச்ச நீதிமன்றம், நேற்று பேசியுள்ளது. அதில் மிக முக்கியமாக, தடுப்பூசிகளை மத்திய அரசுதான் வாங்கி விநியோகிக்க வேண்டும் என்றும், அது மாநில அரசின் வேலையல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை மாநில அரசுகள் விட்டிருப்பதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்திருந்தது.

  மேலும், தாமே முன்வந்து தடுப்பூசிகளை வாங்கி விநியோகித்து அந்த விவரங்களை தயாரிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்றும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி விநியோகிக்க மத்திய அரசு ஏன் நேரடியாக முன்வரவில்லை என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளது.

  இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி கொள்முதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: