உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அமைச்சரவை முடிவு!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இஸ்ரோ ஆய்வு மையம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

news18
Updated: July 31, 2019, 5:30 PM IST
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அமைச்சரவை முடிவு!
உச்ச நீதிமன்றம்
news18
Updated: July 31, 2019, 5:30 PM IST
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 10 விழுக்காடு அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி நீங்கலாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 10 விழுக்காடு அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தற்போது 30-ஆக உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, தலைமை நீதிபதியை தவிர்த்து, 33-க உயரும்.


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இஸ்ரோ ஆய்வு மையம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சிட்பண்ட் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும், முதலீடுகளை முறைப்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியத்தை 22,875 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Loading...

Also see...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...