டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான உபரி நிலங்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டும் விதமாக, தேசிய நில பணமாக்கல் கழகத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உபரி நிலங்கள் மற்றும் கட்டடங்கள், தேசிய நில பணமாக்கல் கழகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் இதுபோன்ற உபரி நிலங்களை விற்று பணமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டம் தனியார் துறை முதலீடுகள், புதிய பொருளாதார நடவடிக்கைகள், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமூக உள்கட்டமைப்பிற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல் போன்றவற்றைத் தூண்டுவதற்கு பயன்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவி.. பிரதமர் மோடிக்கு நன்றி
ஏற்கனவே 2021-22ம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.