Home /News /national /

2700 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் திட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

2700 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் திட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

Rice

Rice

Fortified Rice | இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் நிலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில் இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடும் என யூகமான தகவல்கள் உலா வந்த நிலையில், தற்போது அதை அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
அனைத்து அரசுத் திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் ‘நியூஸ்18’ ஊடகத்திடம் தெரிவித்தன. செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.700 கோடி செலவு செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் நிலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில் இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடும் என யூகமான தகவல்கள் உலா வந்த நிலையில், தற்போது அதை அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை மாலையில் கூடி ஆலோசனை செய்தது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு :

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற்ற போது, பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாட்டில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது என்று கூறியிருந்தார்.



சுதந்திர தின உரையில் இதுகுறித்து அவர் பேசுகையில், “ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட் குறைபாடு போன்ற காரணங்களால் ஏழை குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பல்வேறு அரசுத் திட்டங்களின் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

Also Read : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியுடன் ஊட்டச்சத்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி என்றாலும் சரி, மதிய உணவுத் திட்டத்திற்கு வழங்கப்படும் அரிசி என்றாலும் சரி அல்லது எந்தவொரு அரசு திட்டத்தின் கீழ் அரிசி வழங்கப்பட்டாலும், அதை செறிவூட்டப்பட்டதாக கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தை 2024ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

Also Read : மின்வெட்டு காரணமாக செல்போன் வெளிச்சத்தில் பிரசவம்..

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன

இந்த புது முயற்சி குறித்து, மத்திய அரசுக்கான ஆலோசனைக் குழுவாக செயல்படும் நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் இணைந்து எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதாவது இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் விட்டமின் பி12 போன்ற மைக்ரோ நியூட்ரியண்ட் சத்துகளை அரிசியுடன் சேர்ப்பதை செறிவூட்டப்பட்ட அரிசியாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read : விமானத்தில் சண்டையிட்ட அமைச்சர் ஸ்மிருதி இரானி..!

தற்போது எங்கு செயல்படுத்தப்படுகிறது

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக 15 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 மாநிலங்களில் பரிசோதனை அடிப்படையில் தலா ஒரு மாவட்டத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இந்த அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.

ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: India, Rice, Union cabinet Ministry

அடுத்த செய்தி