முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

news18
Updated: September 19, 2018, 1:59 PM IST
முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
news18
Updated: September 19, 2018, 1:59 PM IST

முத்தலாக்கைத் தடை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வருகிறது. இம்முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடி முத்தலாக் முறை சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் கூறியது. மேலும் உடனடி முத்தலாக்கைத் தடை செய்யும் வகையில் சட்டத்தைத் திருத்தவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.


இதனால் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறாததால் இது தொடர்பாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டப்படி உடனடி முத்தலாக் முறையில் பெண்களை விவாகரத்துச் செய்வது குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

First published: September 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...