பிப்ரவரி மாத தொடக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் திருத்தப்பட்ட டேக்ஸ் ஸ்லாப், லேப் டெவலப்மென்ட், சில சுங்க வரி குறைப்பு மற்றும் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பற்றி அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை “ஃபர்ஸ்ட் அம்ரித் கால் (Amrit Kaal) பட்ஜெட்” என்று கூறி தொடங்கி பல முறை Amrit Kaal என்ற வார்த்தையை பயன்படுத்தினார். 2 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி பயன்படுத்திய அம்ரித் கால் என்பது இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டது. பட்ஜெட் தாக்கலின் போது பேசிய அமைச்சர் இந்திய பொருளாதாரத்தை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பிரகாசமான நட்சத்திரமாக உலகம் அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதிகாரத்தை உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான அம்ரித் ப்ளூ பிரிண்ட்டிற்கான விஷனை 2023-24 பட்ஜெட் அளிக்கிறது. இளைஞர்களை மையமாக கொண்ட குடிமக்களுக்கான வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கம், வலுவான மற்றும் நிலையான மேக்ரோ பொருளாதார சூழல் உள்ளிட்டவை அம்ரித் காலின் அடித்தளத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதி துறையை உருவாக்குவதே இதன் நோக்கம்.
Read More: அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு..? காங்கிரஸ் மாநாட்டில் சூசகப் பேச்சு...!
முந்தைய நிதியாண்டின் உண்மையான செலவினங்களை காட்டிலும், தற்போதைய பட்ஜெட்டில் சமூக துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுகாதாரம், விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, ஊட்டச்சத்து, கல்வி, நீர் வளங்கள், நிதி உள்ளடக்கம், திறன் மேம்பாடு, குழந்தைகள் நலன் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் அதிகரித்த செலவினமே இந்த அதிக நிதி ஒதுக்கீட்டிற்குக் காரணமாகும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பொருளாதார ரீதியாக பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
7.5% நிலையான வட்டி விகிதம் வழங்கும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் எனப்படும் பெண்களுக்கான ஒரு முறை சிறுசேமிப்பு திட்டமும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதிசுதந்திரத்தை வலுப்படுத்த, பெண்களுக்கு அதிக வளங்கள் மற்றும் அணுகலை வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார வலுவூட்டலை எளிதாக்க சமீபத்திய பட்ஜெட்டில் உறுதியான திட்டங்கள் உள்ளன. சமீபத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்விக்கான நிதி ஒதுக்கீடு 2022-23-ல் ரூ.63,449 கோடியில் இருந்து 2023-24-ல் ரூ.68,804 கோடியாக அதிகரித்துள்ளது. மொழிகள், வகைகள் உள்ளிட்டவற்றில் தரமான புத்தகங்கள் கிடைப்பதற்கு வசதியாக அமைக்கப்படும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் பற்றியும் இதன் பட்ஜெட்டில் பேசப்பட்டுள்ளது. கடைசி மைல் வரை கல்வியை அணுக கூடியதாக மாற்ற அடுத்த 3 ஆண்டுகளில், 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு சேவை செய்யும் 740 Eklavya Model Residential பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை அரசு நியமிக்க உள்ளது.
இந்தியாவின் கல்வித் துறையில் உள்ள இடைவெளிகளை குறைப்பது மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், கல்வியில் தொடர் வளர்ச்சியை நாடு பதிவு செய்ய அனுமதிக்கும்.இதனிடையே சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற அரசின் தத்துவமானது விவசாயிகள், இளைஞர்கள், ஓபிசிக்கள், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சியை எளிதாக்குகிறது. மேலும் பின்தங்கியவர்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது.
கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்தை மையமாகக் கொண்டு விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறந்த ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள ஹைதராபாத்தில் உள்ள இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனம் ‘ஸ்ரீ அண்ணா’வினை சிறந்த உலகளாவிய மையமாக மாற்றுவதில் நிதி அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. மாற்று உரங்களை பயன்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க PM PRANAM திட்டம் தொடங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்ம் இன்புட்ஸ், மார்க்கெட் இன்டெல் மற்றும் விவசாயத் தொழில் மற்றும் ஸ்டார்ட்-அப்ஸ்களுக்கான ஆதரவை மேம்படுத்த Digital Public Infrastructure கட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவை தவிர 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதன் மூலம் சுகாதார துறையை மேம்படுத்த, மருந்துத்துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக சமீபத்திய பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும் முக்கிய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Budget Session, Union Budget 2023