Home /News /national /

மத்திய பட்ஜெட் 2022 - தாக்கல் செய்யப்படும் நாள், கூட்டத்தொடர் விபரங்கள் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2022 - தாக்கல் செய்யப்படும் நாள், கூட்டத்தொடர் விபரங்கள் அறிவிப்பு

Nirmala Sitharaman

Nirmala Sitharaman

Union Budget 2022 | நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய உதவும் வகையில், அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மத்திய பட்ஜெட் 2022 தாக்கல் செய்யப்படும் நாள், பட்ஜெட் கூட்டத் தொடர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    கொரோனாவின் தாக்குதலில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், தொற்று அதிகரித்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, விமானப் போக்குவரத்து, உள்நாட்டு உள்பத்தி உள்ளிட்ட துறைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த சூழலில் அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

    சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், மத்திய பட்ஜெட் 2022 இருக்கும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் நடப்பாண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம்தேதி தொடங்கவுள்ளது. மறுநாள் பிப்ரவரி 1-ம்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    முதல் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம்தேதியுடன் நிறைவு பெறும். இதன்பின்னர், மார்ச் 14ம்தேதி தொடங்கும் இரண்டாவது கூட்டத் தொடர் ஏப்ரல் 8-ம்தேதி வரை நடைபெறுகிறது.

    இதையும் படிங்க : போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் தொடங்க வேண்டுமா? உங்கள் கையில் இவ்வளவு தொகை இருந்தால் போதும்!

    கடந்த ஆண்டைப் போலவே, பொருளாதார அறிக்கை ஜனவரி 31-ம்தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய உதவும் வகையில், அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க :  போஸ்ட் ஆபீஸில் அதிக வருமானம் தரும் திட்டம்.. வெறும் ரூ. 100 இருந்தால் கூட போதும் கணக்கை தொடங்கலாம்!

    கடந்த பட்ஜெட் உரையின்போது, தனிநபர் வருமான வரி விகித மாற்றம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் எதையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. கடந்த பட்ஜெட்டின்போது, நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக உள்ளதென அமைச்சர் கூறியிருந்தார்.

    இதேபோன்று டிஜிட்டல் முறையில் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ. 3,768 கோடி ஒதுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Budget Session, Union Budget 2022

    அடுத்த செய்தி