முன்னெப்போதும் இல்லாத அளவாக இந்த ஆண்டு, குறுகிய நேரத்தில் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடித்துக்கொண்டார்.
2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 4வது பட்ஜெட் இது ஆகும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு 1.50 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு 1.32 மணி நேரத்தில் பட்ஜெட் உரையை நிறைவு செய்துள்ளார்.
பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வானது, 1.30 மணிநேரம் முதல் 2 மணிநேம் வரை நடைபெறும். ஆனால், கடந்த 2020ம் ஆண்டு, இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட் உரையை சுமார் 2.40 மணி நேரம் நிகழ்த்தி நிர்மலா சீதாராமன் வரலாறு படைத்தார். இது இந்தியாவின் மிக நிளமான பட்ஜெட் உரையாக தற்போதும் பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்பாக, 2003ல் முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் 2.15 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றி மேற்கொண்ட சாதனையை, 2019ம் ஆண்டில், 2.17 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றி நிர்மலா சீதாராமன் முறியடித்தார்.
இந்த ஆண்டு, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றிய போது எலக்ட்ரோலைட்டுகள் போன்ற எனர்ஜி டிரிங்கை பருகுவதைக் காண முடிந்தது.
வழக்கமாக தனது பட்ஜெட் உரையில் திருக்குறளோ, தமிழ் இலக்கிய வரிகளையோ மேற்கோள் காட்டி உரையாற்றும் நிர்மலா சீதாராமன், இந்த முறை மகாபாரத வரிகளை மட்டுமே மேற்கோள் காட்டினார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.