Home /News /national /

தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2022-23, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2022-23, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1, செவ்வாயன்று, கோவிட்-19 தொற்றுநோய் "மனநலப் பிரச்சனைகளை அதிகப்படுத்தியதால்" மனநலத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.

தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம் (The National Tele Mental Health Program) நிம்ஹான்ஸ்- NIMHANS எனும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ-சயின்சசை மையமாக கொண்டு மனநல ஆலோசனைக்காக இது தொடங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு வரைபடத்தை உருவாக்க முனைப்பு காட்டிய நிதியமைச்சர், COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார்.

ஓமிக்ரான் அலை பற்றி பேசுகையில், இந்தியாவின் தடுப்பூசி பிரச்சாரத்தின் வேகம் பெரிதும் உதவியது என்றும், 'சப்கா பிரயாஸ்' மூலம், இந்த அலையை முறியடிக்கும் என்று தான் நம்புவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி திட்டத்தின் முடுக்கம் ஆகியவை 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கியுள்ளன.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் இகோசிஸ்டத்திற்கான ஒரு திறந்த தளம் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறும்போது, “தொற்றுநோய் எல்லா வயதினருக்கும் மனநலப் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது. தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்த, தேசிய டெலி-மெண்டல் ஹெல்த் திட்டம் தொடங்கப்படும்” என்று நாடாளுமன்றத்தில் சீதாராமன் அறிவித்தார்.

இந்தத் திட்டம் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக 23 டெலி-மெண்டல் ஹெல்த் சென்டர்களைக் கொண்டிருக்கும் மற்றும் NIHMANS மைய நிறுவனமாக இருக்கும். மனநலத் திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆதரவை பெங்களூருவில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) வழங்கும்.
Published by:Muthukumar
First published:

Tags: Union Budget 2022

அடுத்த செய்தி