2021 பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனையை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்

2021 பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனையை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவுசெய்துள்ளார்.

  • Share this:
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய உள்ளார்.

இதையொட்டி, கடந்த 14-ம் தேதி முதல், புதன்கிழமை வரை அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். நிதி, சுகாதாரம், கல்வி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் 9 குழுவினருடன் 15 கூட்டங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

170-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்ததாகவும், பட்ஜெட் தயாரிப்பின்போது, அனைத்து ஆலோசனைகளும் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் உறுதியளித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: