Budget 2019: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் என்னென்ன?

தன்வசம் உள்ள 2வது வீட்டை வாடகைக்கு விடும் போது அதற்கு விதிக்கப்படும் வருமான வரி உச்சவரம்பு ரூ.1,80,000 இருந்து ரூ.2,40,000-யாக உயர்த்தப்பட்டுள்ளது.

news18
Updated: February 1, 2019, 1:39 PM IST
Budget 2019: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் என்னென்ன?
பட்ஜெட் உரை
news18
Updated: February 1, 2019, 1:39 PM IST
மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிரந்தரக் கழிவு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடுத்தர வர்க்கத்தினர் 3 கோடி பேர் பயனடைவார்கள்.

40 ஆயிரம் ரூபாய் வரையிலான வைப்பு நிதிக்கு (Fixed Deposit) வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைக்கான வரிச்சலுகை வரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டாவது வீட்டுக்கடனுக்கும் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இரண்டாவது வீட்டுக்கடனையும் வருமான வரிக்கணக்கில் காட்டி சலுகை பெற்றுக்கொள்ளலாம். தன்வசம் உள்ள 2வது வீட்டை வாடகைக்கு விடும் போது அதற்கு விதிக்கப்படும் வருமான வரி உச்சவரம்பு ரூ.1,80,000 இருந்து ரூ.2,40,000-யாக உயர்த்தப்பட்டுள்ளது.

Also See...

First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...