பட்ஜெட் 2019: ஆன்லைன் வேளாண் சந்தைகளின் பயனை விவசாயிகள் பெற நடவடிக்கை!

உரங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து மாட்டுச்சானம் உள்ளிட்ட இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யும் திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: July 5, 2019, 4:56 PM IST
பட்ஜெட் 2019: ஆன்லைன் வேளாண் சந்தைகளின் பயனை விவசாயிகள் பெற நடவடிக்கை!
நிர்மலா சீதாராமன்
Web Desk | news18
Updated: July 5, 2019, 4:56 PM IST
ஆன்லைன் வேளாண் சந்தைகளின் பயனை விவசாயிகள் பெறும் வகையில் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின் மக்களவையில் முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் தானிய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்ததற்கு பாராட்டு தெரிவித்த அவர், ”எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் அதேப்போல் நாடு தன்னிறைவு பெறும்.

உரங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து மாட்டுச்சானம் உள்ளிட்ட இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யும் திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படும்.

வேளாண்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் தரும்.

நாடு முழுவதும் 10,000 விவசாய கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். இயற்கை முறை விவசாயத்துக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்".

ஆன்லைன் வேளாண் சந்தைகளின் பயனை விவசாயிகள் பெறும் வகையில் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Also watch: வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநாநூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...