ஒரே நாடு ஒரே சட்டம்...! இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்?

uniform Civil Code |

ஒரே நாடு ஒரே சட்டம்...! இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்?
ராஜ்யசபா
  • Share this:
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் அவை நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய நிலையில் அடுத்ததாக நாடு முழுவதும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் நோக்கில் காயை நகர்த்த துவங்கியுள்ளது. ஒ

ரே நாடு ஒரே சட்டம் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆனால், பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றவே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொது சிவில் சட்டம் போன்ற மசோதாக்களை அறிமுகப்படுத்துவது என்றால் 48 மணி நேரத்திற்கு முன்னர் நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும் என்றும் பல சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பொது சிவில் சட்டம் என்றால் என்றால்?

நம் நாட்டில் சட்டங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று கிரிமினல் சட்டம். மற்றொன்று சிவில் சட்டம். இதில் கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. சிவில் சட்டத்தில் மட்டும் மதங்களுக்கு ஏற்ப சில தனிச்சட்டங்கள் உள்ளன. எனினும் சிவில் சட்டத்தில் 80 சதவீதத்துக்கும் மேலான விஷயங்கள் எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருக்கின்றது.மக்கள் தமக்கு இடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய மதம் தொடர்புடைய மிகச் சில விஷயங்கள் மட்டும் தனியார் சிவில் சட்டங்கள் எனப்படுகின்றன. அந்த தனியார் சட்டங்கள் மட்டும் சிலவற்றில் மாறுபடுகின்றன.

மொகலாயர்கள் ஆட்சிக் காலம் முதலே இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைப்படி செயல்படுவதற்கு தனியாக சட்டங்கள் இருந்திருக்கின்றன. 1937 ல் முஸ்லிம் தனியார் சட்டம் அமலுக்கு வந்தது. 1939 ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இவ்வாறாக குறிப்பிட்ட மிகச் சில விஷயங்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு அவர்களின் சமயம் சார்ந்த முறையில் தீர்த்துக் கொள்வதற்கு தனியாக சிவில் சட்டம் அரசியல் சாசனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சுதந்திரத்துக்குப் பின்னும் நீண்டகாலம் போர்ச்சுகீசியர் வசமிருந்த கோவா மாநிலத்துக்கு மட்டும் தனியான பொது சிவில் சட்டம் உள்ளது. அங்கு முஸ்லிம் திருமணச் சட்டம் செல்லாது. கோவாவை போல் நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை இயற்ற மத்தி்ய அரசு முடிவெடுத்திருப்பதாகவும் நடப்பு பட்ஜெட் தொடரில் அதற்கான மசோதாவை தாக்கல் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவினரும் சூசகமாக அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது எனக் கூறி பொது சிவில் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பை தெரவித்துள்ளன. இச்சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலானால் எதிர்க்கட்சிகளும் மதச்சார்பற்ற அமைப்புகளும் பூகம்பத்தை கிளப்பும் என்பது மட்டும் உண்மை.

மேலும் படிக்க: பொருளாதாரம் ஐசியுவில் இருக்கிறது; மருத்துவர்களை அனுப்பிவிட்டீர்கள் - ப.சிதம்பரம்
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்