• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - யுனிசெப்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - யுனிசெப்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உலக அளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை, 1990ம் ஆண்டு 152 கோடியாக இருந்த நிலையில், 2019ல் 52 லட்சமாக குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

    குழந்தைகளின் இறப்பு விகிதம் தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலக அளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை, 1990ம் ஆண்டு 152 கோடியாக இருந்த நிலையில், 2019ல் 52 லட்சமாக குறைந்துள்ளது.

    இந்த மொத்த இறப்பில் மூன்றில் ஒரு பங்கு, நைஜீரியா மற்றும் இந்தியாவில் மட்டுமே பதிவாகியுள்ளன. அதேசமயம், 1990ல் இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 பேர் இறந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது.



    Also read... தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு - ஆர்டிஐ மூலம் வெளிவந்த தகவல்

    மேலும் இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரமாக மாறியுள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: