’ரஃபெல்’ என்ற பெயரில் கிராமம்: பெயரை மாற்றச் சொல்லும் கிராமத்தினர்!

முதலமைச்சர் அலுவலகத்துக்கு சென்று, கிராமத்தின் பெயரை மாற்ற கோரிக்கை வைக்கச் சென்றோம்.

’ரஃபெல்’ என்ற பெயரில் கிராமம்: பெயரை மாற்றச் சொல்லும் கிராமத்தினர்!
ரஃபேல்
  • Share this:
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ரஃபெல் என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அந்த கிராமத்தினர் கோரிக்கைவைத்து வருகின்றனர்.

ரஃபேல் ரக போர் விமானம் வாங்குவதற்கு இந்திய அரசு சார்பில் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். தற்போது, இந்த "ரஃபேல்" என்ற பெயர் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஸ்கர் மாநிலம் மஹாசமுந்த் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் ’ரஃபெல்’. தற்போது, அந்த கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அந்தக் கிராமத்தினர் கோரிக்கை வைத்துவருகின்றனர். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 83 வயது தரம் சிங், ‘ரஃபெல் என்று பெயர் இருப்பதால், மற்ற கிராமத்தினர் எங்களை கேலி செய்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். சிலநாள்களுக்கு முன்பு, முதலமைச்சர் அலுவலகத்துக்கு சென்று, கிராமத்தின் பெயரை மாற்ற கோரிக்கை வைக்கச் சென்றோம்.


ஆனால், முதல்வரைப் பார்க்க முடியவில்லை. ரஃபேல் விவகாரத்தில், எங்கள் கிராமத்தின் மீது எதிர்மறை கருத்துகள் உருவாகியுள்ளது. ஆனால், எங்கள் கிராமத்தை பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வசதி, சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லை. மழையை நம்பியே விவசாயம் செய்யவேண்டிய சூழல் உள்ளது. இங்கே பாசன வசதி இல்லை. அரசியல்வாதிகள், பல கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.

ஆனால், எங்கள் கிராமத்தை வந்து யாரும் பார்க்கவில்லை. யார் வெற்றி பெற்றாலும், எங்கள் கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவைப்போம். பல தலைமுறைகளாக இந்த கிராமத்துக்கு ரஃபெல் என்ற பெயர்தான் இருந்துவருகிறது. சத்திஸ்கர் மாநிலம் உருவாவதற்கு முன்பே இந்த பெயர் இருக்கிறது. எதற்காக இந்தப் பெயர் வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார். இந்த கிராமம் அடங்கியுள்ள தொகுதிக்கு ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading