மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள், ஹைட்ராலிக் லிப்ட் கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னமாக மாறும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏஎஸ்ஐ) மூத்த அதிகாரி தெரிவித்தார்.
ஔரங்காபாத் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எல்லோரா, உலகின் மிகப்பெரிய பாறைகளால் ஆன கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இது இந்து, பௌத்த மற்றும் ஜெயின் சிற்பங்களை ஒரே இடத்தில் கொண்டுள்ளது. இப்பகுதியில் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கொண்டுள்ள இடமாகவும் திகழ்கிறது.
500 மீட்டர் நீளமுள்ள எல்லோரா குகைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக மாற்ற தொல்பொருள் ஆய்வுத் துறை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்று அவுரங்காபாத் வட்டத்தின் கண்காணிப்பாளர் மிலன் குமார் கூறினார்.
ராம்சார் தளத்தில் புதிதாக இணைந்த இந்தியாவின் 5 ஈரநிலங்கள்
இந்த வளாகத்தில் உள்ள 34 குகைகளில், குகை எண் 16, கைலாஷ் குகை என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது ஒரு இரட்டை மாடி அமைப்பாகும், மேலும் சுற்றுலாப் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி, மேலிருந்து அழகிய அதன் சுற்றுவட்டார ஏழிலைக் ரசிக்க வளைவில் செல்ல வேண்டும்.
மேலேற, குகையில் படிக்கட்டுகள் மற்றும் சக்கர நாற்காலிகளின் சீரான இயக்கத்திற்கான சரிவு ஏற்கனவே இங்குள்ளது. தற்போது இதன் அருகே குகை கட்டமைப்பின் இருபுறமும் சிறிய லிஃப்ட்களை நிறுவ தொல்லியல் துறை முன்மொழிந்துள்ளது.
"9 சதுர அடி பரப்பளவில் சிறியதாக இருக்கும் இந்த லிஃப்ட்களை நிறுவுவதற்கான கட்டுமான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் இதில் சக்கர நாற்காலியில் ஒருவர் முதல் தளத்திற்கு எளிதாக செல்ல முடியும்" என்று கூறினார்.
இந்த திட்டத்தினால், ஹைட்ராலிக் லிப்ட் வசதி கொண்ட தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் நாட்டில் உள்ள முதல் உலக பாரம்பரிய தளமாக எல்லோரா உருவாகும். சென்ற மாதம் இந்த திட்டத்திற்கு உயர் அதிகாரிகள் கொள்கை ஒப்புதல் அளித்ததாக அதிகாரி சௌலி கூறினார்.
மலைகளால் சூழப்பட்ட ஒற்றைக் கட்டிடமான கைலாஷ் கோவிலை சுற்றுலாப் பயணிகள் அந்த மலை உச்சியில் இருந்து பார்க்க முடியும் என்றும், மேல் மலையில் அதற்கான பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சில ஓவியங்களுக்கு விளக்குகளை நிறுவவும், சில பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் திட்டத்திற்கான செலவைக் கணக்கிடுவதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
"எல்லோராவில் டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வழிகாட்டிகளை வேண்டும் பார்வையாளர்களுக்காக ஒரு மையப்படுத்தப்பட்ட கவுன்டரை அமைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வளாகத்திற்கு ஒற்றை நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளி இருக்கும்.
மேலும் செல்ஃபிகளுக்கு ஏற்ற இடங்களோடு இயற்கையை ரசிக்க செய்யவும் திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாப் பயணிகள் அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுகிறோம்.
சானிட்டரி பேட் அகற்றும் இயந்திரங்களுடன் மூன்று முதல் நான்கு கழிப்பறை தொகுதிகளை அமைக்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது, குகை வளாகத்தில் மின்சார வாகன சேவை அடுத்த மாதம் தொடங்கும் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharastra