ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை இல்லை.. திருமணமும் இல்லை - சரத் பவார் கவலை

பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை இல்லை.. திருமணமும் இல்லை - சரத் பவார் கவலை

சரத் பவார்

சரத் பவார்

வேலையில்லாத நபருக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை என சரத் பவார் கவலை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்கட்சியின் மாநிலம் தழுவிய Jan Jagar Yatra நடைபயண திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்கு மத்திய ,மாநில பாஜக அரசுகள் தான் பொறுப்பு என குற்றம் சாட்டினார்.

சரத் பவார் தனது உரையில் கூறியதாவது, நான் வெளியே சுற்றுப்பயணம் செல்லும் போது எல்லாம் கிரமங்களை பார்வையிடுவது வழக்கம். எல்லா கிராமத்திலும் 15, 20 இளைஞர்கள் வேலைக்கு போகாமல் வெட்டியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று விசாரிப்பேன். பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள். திருமணமாகி விட்டதா என்று கேட்டேன். அதற்கு அனைவருமே திருமணம் ஆகவில்லை என்று தான் கூறுகிறார்கள்.

வேலையில்லாத நபருக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. மகாராஷ்டிராவின் பெரும்பாலான கிராமங்களில் நிலைமை இப்படித்தான் உள்ளது. நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் போது பாஜக இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை துண்டி அரசியல் செய்கிறது. தேர்தல் நேரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் இவ்வாறு பாஜக வெறுப்பு அரசியலை செய்து வருகிறது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. உடன் இருந்து கவனிக்கும் பிரியங்கா காந்தி!

விவசாயிகள் கடும் உழைப்பால் நாட்டின் வேளாண் உற்பத்தியை உயர்த்தியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு உரிய தொகை கிடைப்பதில்லை. மாறாக இடைத்தரகர்களுக்கு கொள்ளை லாபம் செல்கிறது. இதனால் விலைவாசி உயர்ந்து எளிய மக்களுக்கு சுமை கூடுகிறது. பாஜகவின் மோசமான ஆட்சி காரணமாக மகாராஷ்டிராவிற்கு வர வேண்டிய பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் குஜாரத்திற்கு சென்றுவிட்டன. இவ்வாறு தனது உரையில் சரத் பவார் மத்திய மாநில பாஜக அரசுகளை கடுமையாக சாடியுள்ளார்.

First published:

Tags: Maharashtra, Marriage, Tamil News, Unemployment