காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்-பிரியங்கா ஆவேச பேச்சு!

ராகுலை சமாதானப்படுத்துவதாகக் கூறி காங்கிரஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்-பிரியங்கா ஆவேச பேச்சு!
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்-பிரியங்கா
  • News18
  • Last Updated: May 27, 2019, 9:19 AM IST
  • Share this:
மக்களவை தேர்தல் தோல்வி விரக்தியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியை விட தங்களது குடும்ப நலனுக்கு முக்கியத்துவம் அளித்ததாக மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், கமல்நாத் உள்ளிட்டோர் மீது ராகுல்காந்தி கடும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் பதவி விலக மூத்த தலைவர்கள் மறுப்பு தெரிவிக்க அப்போது குறுக்கிட்டு பேசிய பிரியங்கா காந்தி, மோடிக்கு எதிராக தனது சகோதரரை தனியாக போராட விட்டுவிட்டு மூத்த தலைவர்கள் ஒதுங்கிவிட்டதாக ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.


மேலும், மோடிக்கு எதிரான ரபேல் விவகாரம் உள்ளிட்ட ராகுலின் கோஷத்தை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரஸ் தோல்விக்கு காரணமானவர்கள் இந்த அறையிலே இருப்பதாகவும் பிரியங்கா கடுமையாக சாடியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ராகுலை சமாதானம் செய்ய அவருக்கு அசோக் கெலாட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் பயனில்லாததால் அசோக் கெலாட் அவசரமாக ஜெய்பூரில் இருந்து டெல்லி விரைந்துள்ளார். இதேபோன்று டெல்லியில் இன்று நடைபெறும் முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை ராகுலை சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியாக, தங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் வெற்றி பெறுவதற்காக இன்னொரு முறை போராடலாமே என்றும் மகளிர் காங்கிரஸ் பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


ராகுலை சமாதானப்படுத்துவதாகக் கூறி காங்கிரஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Also see... தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா தமிழிசை?

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்