நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இறந்ததாக வதந்தி; உயிருடன் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்!

தாதா சோட்டா ராஜன்

62 வயதான சோட்டா ராஜனுக்கு, கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 • Share this:
  மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இறந்தததாக செய்திகள் பரவிய நிலையில், உயிருடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதாகவும், கொரோனா தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவனை தரப்பு தெரிவித்துள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலத்தில், பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தாதா சோட்டா ராஜன், கடந்த 2015ல் இந்தோனேசியாவின் பாலி நகரில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவர் மீது 68 வழக்குகள் உள்ளன. இதில், மகாராஷ்டிராத்தில் மட்டும் 28 வழக்குகள் உள்ளன.

  இந்நிலையில், 62 வயதான சோட்டா ராஜனுக்கு, கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அறிகுறியற்ற கொரோனா தொற்றுக்கு ஆளான சிறை காவலரிடமிருந்து, சோட்டா ராஜனுக்கு நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என, கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

   
  Published by:Esakki Raja
  First published: