‘அங்கிள் ஜி’ வேற வேலை தேடுங்க: மேற்குவங்க ஆளுநரை சாடிய பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா!

எம்.பி மஹுவா மொய்த்ரா Vs மேற்குவங்க ஆளுநர்

ஆளுநரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பெண் எம்.பி மஹூவா மொய்த்ரா, ‘அங்கிள் ஜி’ என ஆளுநரை குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
மேற்குவங்கத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான பணிப்போர் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரும் கூட இந்த மோதல் நீடித்து வருவது கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.

ஆளுநர் ஜக்தீப் தன்கரை ட்விட்டரில் வம்புக்கு இழுத்து அடுத்த மோதலுக்கு வழிவகுத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி மஹூவா மொய்த்ரா.

தேர்தலுக்கு பின்னர் வன்முறை சம்வங்கள் மேற்குவங்கத்தில் அதிகரித்துள்ளதாகவும், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் வெறியாட்டங்களில் ஈடுபடுவதாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆளுநர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், மேற்குவங்க சட்ட ஒழுங்கின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் காவல்துறையினரும், பழிவாங்கும் அரசியலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஆளுநரின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள பெண் எம்.பி மஹூவா மொய்த்ரா, ‘அங்கிள் ஜி’ என ஆளுநரை குறிப்பிட்டு, மேற்குவங்கத்தின் இந்த இக்கட்டான நிலை மேம்படவேண்டும் என்றால் நீங்கள் டெல்லிக்கு சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஹூவா மொய்த்ரா வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், ஆளுநர் மாளிகையில் குடும்ப உறுப்பினர்களை சிறப்பு அதிகாரிகளாக (officers on special duty - OSD) ஆளுநர் தன்கர் நியமித்திருப்பதாக குற்றம்சுமத்தியிருப்பதுடன், பெயர், பணி விவரம் மற்றும் ஆளுநருடனான உறவு குறித்த பட்டியல் ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, அபுதோய் சிங் செகாவத், அகில் சவுத்ரி, ருச்சி துபே, பிரசாந்த் தீக்‌ஷித், கௌஸ்தவ் வலிகர் மற்றும் கிஷன் தன்கர் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Also Read:   முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒரு மாத சாதனை.. சொன்னதும்... செய்ததும்..

இதனிடையே குடும்ப உறுப்பினர்களை ஆளுநர் மாளிகையில் சிறப்பு அதிகாரிகளாக நியமித்திருப்பதாக மஹூவா மொய்த்ரா கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது எனவும், ஆளுநர் மாளிகையின் சிறப்பு அதிகாரிகள் 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 4 வேறு சாதிகளை சேர்ந்தவர்கள், இவர்கள் யாரும் என் சாதியையோ, என் மாநிலத்தையோ, என் நேரடி குடும்ப உறுப்பினர்களோ கிடையாது என ஆளுநர் தன்கர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை நம் அனைவருக்கும் இருக்கிறது. மாநில அரசை தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார். அவர் கண்ணாடியை பார்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். தனது ஒட்டுமொத்த கிராமத்தையும் அவர் ஆளுநர் மாளிகைக்கு கொண்டு வந்திருப்பதாக மஹூவா மொய்த்ரா குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: