தொன்மையான தமிழ் மொழியை கற்க முடியாமல் போனது வேதனை - பிரதமர் மோடி வருத்தம்

தொன்மையான தமிழ் மொழியை கற்க முடியாமல் போனது வேதனை - பிரதமர் மோடி வருத்தம்

பிரதமர் நரேந்திர மோடி

நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழை நீரைச் சேகரிக்கவும் 100 நாட்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

 • Share this:
  உலகின் தொன்மையான தமிழ் மொழியை என்னால் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.

  ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 74-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

  மே-ஜூன் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை தொடங்கிவிடும். பருவமழை தொடங்குவதற்கு முன் நாட்டில் நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழை நீரைச் சேகரிக்கவும் 100 நாட்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

  மேலும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமராகவும், முதல்வராகவும் நீண்டகாலமாக இருந்த காலத்தில் உங்களால் தவறவிட்ட விஷயங்கள் என்ன என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது.

  உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை என்னால் கற்பதற்குப் போதுமான முயற்சிகளை எடுக்க முடியாமல் போனதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். தமிழ் இலக்கியம் மிகவும் அழகானது'' என்றார்.
  Published by:Vijay R
  First published: