ஹோம் /நியூஸ் /இந்தியா /

வேட்பாளர் கிடைக்கவில்லை: தொகுதியை காங்கிரஸிடம் திருப்பிக்கொடுத்த குமாரசாமி!

வேட்பாளர் கிடைக்கவில்லை: தொகுதியை காங்கிரஸிடம் திருப்பிக்கொடுத்த குமாரசாமி!

எச் டி குமாரசாமி

எச் டி குமாரசாமி

ஜேடிஎஸ் கட்சிக்கு 6 தொகுதிகளில் மட்டுமே வாக்குகள் உள்ள நிலையில் எப்படி 12 அளிப்பது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சை வெடித்தது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட தங்களிடம் வேட்பாளர்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஜேடிஎஸ் கட்சி திருப்பி அளித்துள்ளது.

  கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் காங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டின் போது ஜேடிஎஸ் தங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுவந்தது.

  ஜேடிஎஸ் கட்சிக்கு 6 தொகுதிகளில் மட்டுமே வாக்குகள் உள்ள நிலையில் எப்படி 12 அளிப்பது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சை வெடித்தது. ஆனால் பேச்சுவார்த்தை முடிவில் ஜேடிஎஸ் கட்சிக்கு ராகுல் காந்தி 8 தொகுதிகளை வழங்கியிருந்தார்.

  இந்நிலையில் தங்களுக்குப் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளர் இல்லை. எனவே இந்தத் தொகுதியில் நீங்களே வேட்பாளரைத் தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று ஜேடிஎஸ் காங்கிரஸ் கட்சியிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது.

  பெங்களூரு வடக்கு தொகுதியைத் திருப்பி ஒப்படைத்த ஜேடிஎஸ் இந்தத் தொகுதியில் நிறுத்தப்படும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தங்களது சின்னத்தில் நின்று தான் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளது.

  கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தேதி என்பதால் இது இரண்டு கட்சி வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மறுபக்கம் ஜேடிஎஸ் கட்சியின் இந்த முடிவை வரவேற்பதாகக் கர்நாடக காங்கிரஸ் கட்சி தேர்தல் பொருப்பாளர் கே.சி.வேணுகோப்பால் கூறியுள்ளார்.

  மேலும் பார்க்க: 

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Election 2019, HD Kumaraswamy, Lok Sabha Election 2019