கிரெடிட் கார்டு கடன் நெருக்கடி - 4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை

"சுரேஷ் குமாரின் மனைவி மஞ்ஜீத் கவுர், மின்சார கம்பி மீது விழுந்ததால் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்"

news18
Updated: July 26, 2019, 9:02 AM IST
கிரெடிட் கார்டு கடன் நெருக்கடி - 4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை
மாதிரிப்படம்
news18
Updated: July 26, 2019, 9:02 AM IST
கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட ரூ.8 லட்சம் கடனை கட்டமுடியாததால், டெல்லியைச் சேர்ந்த நபர் 4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜகத்புரி பகுதியில் வசிப்பவர் சுரேஷ் குமார். கடந்த திங்கள் அன்று அதிகாலை 3 மணிக்கு தான் வசிக்கும் வீட்டின் மாடியில் இருந்து தனது 4 வயது மகளுடன் கீழே குதித்துள்ளார்.

கணவர் குழந்தையுடன் கீழே குதித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி தானும், குதித்தார். சுரேஷ் குமார் படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில், குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.


சுரேஷ் குமாரின் மனைவி மஞ்ஜீத் கவுர், மின்சார கம்பி மீது விழுந்ததால் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலையில் இருந்ததால் எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்று தெரியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். நேற்று மாலை கவுருக்கு நினைவு திரும்பிய நிலையில், உண்மை காரணம் தெரிந்துள்ளது.

சுரேஷ் குமார் பல வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். அதன் மூலம், சுமார் 8 லட்சம் ரூபாய் அளவில் கடன் பெற்றுள்ளார். ஆனால், கடனை திரும்ப செலுத்த முடியாததால் தினமும் வங்கிகளில் இருந்து நெருக்கடி வந்துள்ளது. ஒரு கட்டத்தில் நெருக்கடியை சமாளிக்க முடியாத சுரேஷ் குமார், தனது குழந்தையுடன் மாடியில் இருந்து குதித்துள்ளார்.

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...