ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை... மனமுடைந்த 9-ம் வகுப்பு சிறுமி தீக்குளித்து தற்கொலை

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை... மனமுடைந்த 9-ம் வகுப்பு சிறுமி தீக்குளித்து தற்கொலை
மாதிரிப் படம்
  • Share this:
கேரளாவில் ஆன்லைன் வழியாக கல்வி கற்க முடியாததால் மனமுடைந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.

பொதுமுடக்கம் காரணமாக கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி "முதல் பெல்" என அழைக்கப்படும் ஆன்லைன் வகுப்புகள் விக்டர்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.

ஆன்லைன் வழியாக தானும் பாடம் படிக்க வேண்டுமென ஆசைப்பட்ட மலப்புரத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி, தனது அப்பாவிடம் சென்று, ஓடாமல் இருந்த தொலைக்காட்சியை சரிசெய்யுமாறு கூறினார்.


குடும்பம் வறுமையில் வாடியதால் சிறுமியின் விருப்பத்தை தந்தையால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை என வருத்தத்தோடு இருந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

Also read.... கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்... மோடி சூளுரை




Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading