காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு கவலையளிக்கிறது! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வேதனை
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு கவலையளிக்கிறது! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வேதனை
மாதிரிப் படம்
இணையம், தொலைதொடர்பு துண்டிப்பு, சட்டப்பேரவை செயல்படாதது, அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
காஷ்மீரிகள் மனித உரிமைகள் விவகாரத்தில் இந்தியாவின் தற்போதைய செயல்பாடுகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது என்று ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையர் மிட்செலே பாசெலேட் வேதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 42-வது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிட்செலே பாசெலேட், ‘காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதிப்படுத்தவேண்டும்.
அவர்களது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். காஷ்மீர் மக்களின் மனித உரிமைகள் இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளது. இணையம், தொலைதொடர்பு துண்டிப்பு, சட்டப்பேரவை செயல்படாதது, அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும். மக்களுக்கான அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கவேண்டும். கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.