எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்த இந்திய பெண் அதிகாரி!

உயிரிழந்த இந்தயர்களில் ஒருவரான ஷிகா கார்க் என்பவர ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஆவார்.

எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்த இந்திய பெண் அதிகாரி!
ஷிகா கார்க்
  • News18
  • Last Updated: March 11, 2019, 12:39 PM IST
  • Share this:
எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 இந்தியர்கள் உட்பட அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த இந்தயர்களில் ஒருவரான ஷிகா கார்க் என்பவர ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஆவார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது.

அந்த விமானத்தில் 149 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 157 பேர் இருந்தனர். விமானம் நைரோபியை நெருங்கிய போது, நைரோபியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷோப்டு நகரில் திடீரென்று விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.


விபத்துக்குள்ளான எத்தியோப்பியா விமானத்தின் பாகங்கள்


இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் 32 கென்ய நாட்டைச் சேர்ந்தவர்களும், 18 கனடாவைச் சேர்ந்தவர்களும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒன்பது பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 8 பேரும், சீனாவைச் சேர்ந்த 8 பேரும், இங்கிலாந்தை சேர்ந்த 7 பேரும், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தூதரகத்தின் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள உதவுமாறும் தமது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
வைத்யா பன்னா கணேஷ், வைத்யா ஹன்சின், நுகாவரப்பு மணிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகிய 4 இந்தியர்கள் விமான விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஷிகா கார்க் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் நைரோபியில் நடைபெறும் சுற்றுச்சூழல் சார்ந்த ஐ.நா. அவை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றவர் என்பதை சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே விமான விபத்துக்கான காரணம் இது வரை தெரியவில்லை. இதனை கண்டறிய தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் கூறியுள்ளது
First published: March 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்