காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் - ஐ.நா பொதுச் செயலாளர்

காஷ்மீர் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Web Desk | news18india
Updated: August 9, 2019, 8:15 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் - ஐ.நா பொதுச் செயலாளர்
ஐ.நா பொதுச்செயலாளர்
Web Desk | news18india
Updated: August 9, 2019, 8:15 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய குட்டரேஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விதித்திருப்பது மனித உரிமையை மோசமாக்கும் என்பதே ஐநா பொதுச் செயலாளரின் கருத்து என்று கூறினார்.

இந்தியப் பகுதியில் உள்ள காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக வெளியான செய்தி குறித்து பொதுச் செயலாளர் கவலையடைந்துள்ளார். இது பிராந்தியத்தின் மனித உரிமை சூழல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.


ஜம்மு-காஷ்மீரின் நிலைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஒர்ட்டாகுஸ், காஷ்மீர் பிரச்சினையை எந்தவொரு மூன்றாவது நபர் மத்தியஸ்தம் இல்லாமல், இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

பாங்காக்கில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருவதாகவும் மோர்கன் ஒர்ட்டாகுஸ் தெரிவித்தார்.

Loading...

Also see..70 ஆண்டு வரலாறு காஷ்மீர் இணைப்பின் கதை!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...