முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி மறைவு: வட கர்நாடகத்தை தனி மாநிலமாக்க இறுதிவரை குரல் கொடுத்தவர்..

கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி மறைவு: வட கர்நாடகத்தை தனி மாநிலமாக்க இறுதிவரை குரல் கொடுத்தவர்..

உமேஷ் கட்டி

உமேஷ் கட்டி

Umesh katti : கர்நாடகாவில் இருந்து வட கர்நாடகாவை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று உமேஷ் கட்டி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக உணவு மற்றும் சிவில் சப்ளை மற்றும் வனத்துறை அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 61.

மாநில அரசியல் தேர்தலில் ஓன்பது தேர்தல்களில் போட்டியிட்டு அதில் 8 தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தமானவர் உமேஷ் கட்டி. கடந்த பத்து வருடங்களில்  பல மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது  கர்நாடக மட்டும் புறக்கணிக்க பட்டுவந்தது என்று கூறி கர்நாடகாவில் இருந்து வட கர்நாடகாவை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.

அவருடைய  நாற்பது  வருட அரசியல் வாழ்க்கையில் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய ஜேடியு, ஜேடிஎஸ் மற்றும் பாஜகவின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், வட கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற  கோரிக்கையில் உமேஷ் கட்டி உறுதியாக நின்று பிரச்சனைகளை சரி செய்ய போராடினர். அவரது புகழ் மற்றும் வட கர்நாடகத்தில் உள்ள  லிங்காயத் சமூகத்தினரிடம் இருந்து அவர் பெற்ற பெரும் ஆதரவின் காரணமாக, முதலமைச்சர் பதவிக்கு தகுதியான நபராகவே அவர் தன்னை எண்ணிக்கொண்டார்.

மார்ச் 14, 1961ல் பணக்கார மற்றும் பிரபலமான கட்டி குடும்பத்தில் உமேஷ் கட்டி பிறந்தார். அரசியலில் 80 களின் முற்பகுதியில் காலடி வைத்தார்.  தனது தந்தை விஸ்வநாத் கட்டியின் இறப்புக்கு பின் அவரது தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு ஒன்பது சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு அதில் 8ல் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: பின் இருக்கையில் இருப்பவர் சீட் பெல்ட் அணியாவிட்டாலும் அபராதம்.. சைரஸ் மிஸ்திரி மரணத்தை தொடர்ந்து நிதின் அட்கரி பேச்சு

உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டியும் அரசியலில் செல்வாக்கு மிகுந்தவர். சகோதரர்களின் அரசியல் செல்வாக்கின் பலனை அறுவடை செய்ய, 2008 இல் இரண்டு கட்டி சகோதரர்களையும் பாஜக தங்கள் கட்சியில் இணைத்துகொண்டது.  அதன் பின்னர்,  பாஜக வட கர்நாடகா பகுதியில், குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.

First published:

Tags: Karnataka, Minister