• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Umang ஆப்பில் அருகாமையில் இருக்கும் அரசாங்க வசதிகளை நேவிகேட் செய்து அறிவது எப்படி?

Umang ஆப்பில் அருகாமையில் இருக்கும் அரசாங்க வசதிகளை நேவிகேட் செய்து அறிவது எப்படி?

 umang APP

umang APP

UMANG ஆப்பை மேப்மை இந்தியா வரைபடங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், குடிமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசாங்க சேவைகளை, ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்" என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
மேப் மை இந்தியாவின் சமீபத்திய ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, அதனால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் விரிவான, இன்டெர்ஆக்டிவ்வான தெரு மற்றும் மற்றும் கிராம அளவிலான வரைபடங்களை மக்கள் காண முடியும்.

டிஜிட்டல் வரைபடங்களில் அரசாங்க வசதிகளைக் கண்டறிய மக்களுக்கு உதவுவதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உள்நாட்டு நேவிகேஷன் நிறுவனமான மேப் மைஇந்தியாவின் சேவைகளை ஒருங்கிணைத்துள்ளது. இது ரேஷன் கடைகள், மண்டி, சில நிமிடங்களுக்கு முன் மின்னல் தாக்கிய இடங்கள், இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்ப் மற்றும் எரிவாயு நிலையங்களை எளிதாகக் கண்டுபிடிக்க மக்களுக்கு உதவும்.

“டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கும், 'ஆத்மநிபார் பாரத்’-ன் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு, மேப்மைஇந்தியா உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) மூலம் ' உமாங் ஆப்' இல் வரைபட சேவைகளை இயக்கியுள்ளது.

Also Read:  கூகுள் உங்களை எல்லா இடங்களிலும் கண்காணிக்கிறதா? விளம்பர விற்பனைக்காக மின் அஞ்சல்களை படிக்கிறார்களா?

"UMANG ஆப்பை மேப்மைஇந்தியா வரைபடங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், குடிமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசாங்க வசதிகளான மண்டிகள், இரத்த வங்கிகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் பல அரசாங்க சேவைகளை, ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்" என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உமாங் – UMANG (Unified Mobile Application for New-age Governance – நவீன தலைமுறையின் நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு) 257 மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் இருந்து, சுமார் 1,251 சேவைகளுக்கான அணுகலை மக்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, மேப்மைஇந்தியாவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் விரிவான மற்றும் இன்டெர்ஆக்டிவ் ஆன தெரு மற்றும் கிராம அளவிலான வரைபடங்களை மக்கள் காண முடியும்.

Also Read:  அம்மாடியோவ்...! பழங்கால டெலிபோன் பூத்-க்கு இவ்வளவு விலையா? - செடி விற்பனை செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

உமாங் ஆப் மற்றும் மேப்மைஇந்தியா ஆகியவற்றுக்கு இடையேயான இந்த இணைப்பு மூலம் குடிமக்கள் பயணிக்கும் / ஓட்டும் தூரத்தைத் தெரிந்து கொள்ளவும், திசைகளைப் பற்றிய அறிவிப்பைப் பெறவும், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகள் உள்ளிட்ட இடங்களுக்கான திருப்புதல் மற்றும் விஷுவல் வழிகாட்டுதலையும் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



மற்றொரு தனி அறிக்கையில், மேப்மைஇந்தியாவின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ரோஹன் வர்மா, “இந்திய அரசாங்கத்தின் தேசிய இ-கவர்னன்ஸ் பிரிவில் ஒருங்கிணைந்து, மேப்மைஇந்தியா வரைபடங்கள் மற்றும் API களுடன் உமாங் செயலியை இயக்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என உற்சாகத்துடன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உமாங் செயலி ஒரு அற்புதமான பயன்பாடு என்று கூறிய வர்மா, ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் குடிமக்கள் நூற்றுக்கணக்கான அரசு சேவைகளை அணுக உதவும் வகையில் இந்திய அரசு உருவாக்கிய அற்புதமான பயன்பாடு இது என விளக்கியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: