Home /News /national /

உக்ரைன் போரால் அல்லல்படும் இந்திய மருத்துவ மாணவர்கள்..! கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்க்காலம்

உக்ரைன் போரால் அல்லல்படும் இந்திய மருத்துவ மாணவர்கள்..! கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்க்காலம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது - மத்திய அரசு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டத்தில் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,000 பேரும் அடக்கம். கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பினர். போர் தொடர்ந்து நீடித்து வருவதால் மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

    தங்களை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஏராளமான மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷூ தூலியா அமர்வில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வழக்கு தொடர்பாக வியாழக்கிழமை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலளர் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், குறைவான கட்டணம் ஆகிய இரு காரணங்களை முன்வைத்து மாணவர்கள் உக்ரைன் செல்வதாகவும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை இந்திய மருத்துவ கல்லூரிகளில் அனுமதிப்பது பல்வேறு வழக்குகளுக்கு வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்தியாவில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அவர்களால் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

    உக்ரைனில் போர்ச்சூழல் காரணமாக படிப்பை முடிக்க முடியாத மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தடையில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியிட்டபோது அறிவிப்பை இந்திய பல்கலைகழகங்களில் சேர ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்திக்கொள்ள முடியாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read: CUET - UG தேர்வு முடிவுகள் வெளியானது..!

    ஆகஸ்ட் 3- ஆம் தேதி, வெளியுறவுத் துறைக்கான மக்களவை கமிட்டி, மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க பரிசீலிக்க வேண்டும் என சுகாதாரத் துறையை கேட்டுக்கொண்டிருந்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில், முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Medical Students, Russia - Ukraine, Supreme court

    அடுத்த செய்தி