Home /News /national /

இந்தியாவில் மலர்ந்த காதல்... டெல்லி வழக்கறிஞரை கரம்பிடிக்கும் உக்ரைன் இளம்பெண்...

இந்தியாவில் மலர்ந்த காதல்... டெல்லி வழக்கறிஞரை கரம்பிடிக்கும் உக்ரைன் இளம்பெண்...

இருவரும் முதன்முறையாக 2020-ல் இந்தியாவில் சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

    ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் இருந்து இந்தியா தப்பி வந்துள்ள இளம்பெண் அன்னா ஹோரோ டெட்ஸ்கா டெல்லி வழக்கறிஞர் அனுபவ் பாசினை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி கொள்ளுமாறு ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், விடாப்பிடியாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

    போர் ஆரம்பிக்கப்பட்டபோது தலைநகர் கீவ்வில் இருந்துள்ள ஹோரோ டெட்ஸ்கா தனது நண்பர் அனுபவ் பாசினுடன் தப்பி இந்தியா வந்துள்ளார். இருவரும் முதன்முறையாக 2020-ல் இந்தியாவில் சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

    இதையும் படிங்க - 6 மாதத்திற்கு ரேஷன் இலவசம்.. மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!

    ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் அன்னா ஹோரோடெட்ஸ்கா, லாக் டவுன் சமயத்தில் இந்தியாவில் சிக்கியுள்ளார். அப்போது அனுபவ் வீட்டில்தான் அவர் தங்கியுள்ளார்.

    இதையும் படிங்க - ''இந்தியா - சீனா இடையிலான உறவு சுமுகமாக இல்லை'' : வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர்
    பின்னர் அவர் உக்ரைன் சென்ற நிலையில் அங்கு ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இருவரும் நல்ல தொடர்பில் இருந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் அனுபவும், அன்னாவும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி