ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரிட்டன் பிரதமர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப் பயணம்... குஜராத் புல்டோசர் தொழிற்சாலையை பார்வையிட்டார்

பிரிட்டன் பிரதமர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப் பயணம்... குஜராத் புல்டோசர் தொழிற்சாலையை பார்வையிட்டார்

ஜேசிபி தொழிற்சாலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஜேசிபி தொழிற்சாலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். காந்தியடிகளின் ராட்டையை சுற்றிப் பார்த்து மகிழ்ந்த அவருக்கு, வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலத்திற்கு சென்ற அவர் அங்கு புல்டோசர் தொழிற்சாலையை பார்வையிட்டார்.

டெல்லி நகராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி முஸ்லிம்கள் வசித்து வந்த வீடுகளை புல்டோசர் உதவி கொண்டு இடித்து தள்ளியுள்ளது. இந்த நிலையில் புல்டோசர் தொழிற்சாலையை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

புல்டோசர் தொழிற்சாலையை பார்வையிடுவதற்கு முன்பாக அகமதாபாத்தில் தொழில் அதிபர் கவுதம் அதானியை, போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எரிபொருளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது, பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வது, விமானத்துறை மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவை தொடர்பாக பேசப்பட்டது.

இதையும் படிங்க - மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்: தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த போரிஸ் ஜான்சன் நேரடியாக குஜராத் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். காந்தியடிகளின் ராட்டையை சுற்றிப் பார்த்து மகிழ்ந்த அவருக்கு, வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கப்பட்டன.

போரிஸ் ஜான்சன் பிரதமராக இருக்கும் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் வாங்கியபோது, சுதந்திர போராட்ட நினைவு சின்னங்களில் ஒன்றாக ராட்டை இருந்தது குறிப்பிடத்தக்கது. சபர்மதி ஆசிரமத்தை தொடர்ந்து,  காந்திநகரில் உள்ள சுவாமி நாராயண் அக்சர்தம் மடத்திற்கும் சென்று போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார்.

இதையும் படிங்க - பிரதமர் மோடியை விமர்சித்து ட்வீட்... அசாம் போலீசாரால் குஜராத் எம்எல்ஏ கைது

பிரிட்டன் பிரதமரின் குஜராத் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்திய பயணத்தின்போது இந்தோ – பசிபிக் நாடுகள் விவகாரம், பிரிட்டன் – இந்தியா இடையே சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பு துறையில் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு போரிஸ் ஜான்சன் முக்கியத்துவம் அளிக்கிறார்.

முதன்முறையாக பிரிட்டன் பிரதமர் ஒருவர் குஜராத்திற்கு வருவது என்பது இதுவே முதன் முறையாகும். தனது முதல்நாள் இந்திய பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன், ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் எனது முதல்நாள் பயணம் அற்புதமாக அமைந்தது. இரு நாடுகளுக்கும் வளம் ஏற்படுவதற்கான நல்ல வாய்ப்புகளை என்னால் காண முடிந்தது. இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவு வேலைவாய்ப்புகளையும், வளர்ச்சியையும் அளிக்கும்.’ என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Boris johnson