காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம்! குடிமகன்களுக்கு பிரிட்டன், ஜெர்மனி எச்சரிக்கை

news18
Updated: August 3, 2019, 11:10 PM IST
காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம்! குடிமகன்களுக்கு பிரிட்டன், ஜெர்மனி எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர்
news18
Updated: August 3, 2019, 11:10 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு குடிமகன்களுக்கு பிரிட்டன் மற்றும் ஜெர்மன் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

அமர்நாத் யாத்திரை கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஹல்காம், பால்தால் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், ஆகஸ்ட் 4 வரை யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரி கேஜேஎஸ். தில்லோன், அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் ராணுவத் தயாரிப்பில் உருவான கண்ணிவெடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர் , தொலைநோக்கி பொருத்திய ரைஃபல் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று ஜம்மு - காஷ்மீர் மாநில அரசாங்கம் உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் மிகப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.


இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு யாரும் சுற்றுலா செல்லவேண்டாம் என்று தங்களது குடிமகன்களுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது. பிரிட்டனைத் தொடர்ந்து, ஜெர்மனி அரசு, அவர்களது நாட்டு குடிமகன்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Also see:

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...