ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒரு கிலோ எடை குறைத்தால் ரூ.1000 கோடி.. சவால் விட்ட நிதின் கட்கரி.. 32 கிலோ குறைத்த எம்பி!

ஒரு கிலோ எடை குறைத்தால் ரூ.1000 கோடி.. சவால் விட்ட நிதின் கட்கரி.. 32 கிலோ குறைத்த எம்பி!

சவாலுக்காக 32 கிலோ குறைந்த உஜ்ஜைன் எம்பி !

சவாலுக்காக 32 கிலோ குறைந்த உஜ்ஜைன் எம்பி !

அதை சவாலாக எடுத்துக்கொண்டு கடந்த ஜூன் மாதம் வரை 15 கிலோ எடையை அனில் குறைத்துள்ளார். உறுதியளித்தபடி நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ujjain |

  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உஜ்ஜைன் எம்பி குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 1000 கோடி தருவதாக கூறிருந்தார். அதற்காக இதுவரை 32 கிலோ குறைந்து விட்டு நலப்பணி நிதியை பெற்றுள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை 2019 ஆம் ஆண்டு தொடங்கினார். இது குறித்து இந்த ஆண்டு பிப்ரவரியில், உஜ்ஜயினியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி “உஜ்ஜைன் எம்பி அனில் ஃபிரோஜியா இழக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும், உஜ்ஜயினியில் வளர்ச்சிப் பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் தர சம்மதிக்கிறேன்” என்று மேடையில் கூறினார்.

  அதை சவாலாக எடுத்துக்கொண்டு கடந்த ஜூன் மாதம் வரை 15 கிலோ எடையை அனில் குறைத்துள்ளார். உறுதியளித்தபடி நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எடை குறைப்பு உஜ்ஜயினிக்கு பட்ஜெட் ஒதுக்கினால், தொகுதியின் வளர்ச்சிக்காக மேலும் எடையைக் குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதை அப்படியே தொடர்ந்து தற்போது 32 கிலோ வரை குறைத்துள்ளார்.

  ரூ.16ஆயிரம் கோடி! பாரத் பெயரில் யூரியா, டிஏபி! ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கிய பிரதமர்!

  உடல் எடையைக் குறைப்பதற்காக கடுமையான டயட் அட்டவணையைப் பின்பற்றுவதாக பாஜக எம்.பி. ஃபிரோஜியா தனது உடற்பயிற்சி முறையை விளக்கினார். "நான் காலை 5.30 மணிக்கு எழுந்து காலை நடைபயிற்சிக்கு செல்கிறேன். எனது காலை உடற்பயிற்சியில் ஓட்டம், உடற்பயிற்சி மற்றும் யோகா அடங்கும்.

  அதோடு ஆயுர்வேத உணவு அட்டவணையைப் பின்பற்றுகிறேன்.

  அளவான காலை உணவை எடுத்துக்கொள்கிறேன். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு, ஒரு கிண்ணம் பச்சை காய்கறிகள் மற்றும் ஒரு ரொட்டி கலந்த தானியங்களை உண்கிறேன். இடையிடையே கேரட் சூப் அல்லது உலர் பழங்கள் சாப்பிடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 135 கிலோவாக இருந்த அவர் இந்த சவாலில் எடை குறைந்து 93 கிலோவாக உள்ளார்.

  திங்களன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அனில் ஃபிரோஜியா கட்கரியின் சவாலை ஏற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட 32 கிலோ எடையைக் குறைத்ததாக கூறியுள்ளார்.மேலும் ‘அதை மத்திய அமைச்சரை சந்தித்து கூறினேன். அவர் அதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். வாக்குறுதி அளித்தபடி, அவர் இப்பகுதிக்கு ரூ.2,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்" என்று அனில் ஃபிரோஜியா கூறினார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Fitness, Nitin Gadkari, Ujjain S12p22