Home /News /national /

Aadhaar OTP-யில் இந்த தவறை மட்டும் செய்துவிட வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை

Aadhaar OTP-யில் இந்த தவறை மட்டும் செய்துவிட வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை

ஆதார்

ஆதார்

Aadhaar OTP | ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் ஓடிபி மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஆதார் என்பது இந்தியர்களின் மிக முக்கிய ஆவணங்களின் ஒன்றாக உள்ளது. இதில் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பல உள்ளன. என்றாலும், இது பாதுகாப்பாக உள்ளதா என்பது கேள்விக்குறியான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், ஆதார் ஓடிபியை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் ஓடிபி மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க ரேண்டம் எண் என்பது தான் ஒருவரின் மிக அவசியமான எண்ணாக உள்ளது. மேலும் வங்கி கணக்கைத் திறக்கும்போதும், சமூக சேவைத் திட்டங்களிலிருந்து சலுகைகளை பெறும்போதும், அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு அதிகாரிக்கும் வேலைக்கு விண்ணப்பிக்கும்போதும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இது அவசியமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக ஒருவரின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் இது இருந்து வருகிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு அரசு நிறுவனமான UIDAI-க்கு உள்ளது.

இருப்பினும், விவரங்களின் பாதுகாப்பு எல்லா நேரங்களிலும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது ஒவ்வொரு நபரின் பொறுப்பாகும். வேண்டுமென்றே அல்லது அலட்சியம் காரணமாக அத்தியாவசிய மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வெளியிட கூடாது என்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். மோசடி செய்பவர்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதும், உங்கள் ஆதாரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதையும் உறுதிசெய்ய, இந்த முக்கியமான ஆதார் எண்ணை பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த UIDAI சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது.



ஆதார் அட்டை பாதுகாப்பு டிப்ஸ்

உங்கள் ஆதார் ஓடிபி-யை கேட்டு ஏஜென்சியில் இருந்து அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று UIDAI கூறியுள்ளது. மேலும் உங்களுடையதைத் தவிர வேறு எந்த சாதனத்திலும் ஆதார் பற்றிய தகவல்களை பதிவிறக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஒருவேளை அவ்வாறு செய்தால், அந்த சாதனத்தில் இருந்து ஆதார் அட்டை ஃபைலை நீக்குவதை உறுதிசெய்யவும். மேலும், அதிகாரப்பூர்வ UIDAI போர்ட்டலில் இருந்து மட்டுமே உங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read : உங்கள் பான்கார்டு தொலைந்தால் உடனே இதை செய்யுங்கள்... தவறினால் ரூ.10,000 அபராதம்

ஆதார் அட்டையை மற்றவர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்க தங்கள் கார்டுகளைப் லாக் செய்யவும், தேவைப்படும்போது அதைத் அன்-லாக் செய்யவும் முடியும். இதற்கு உங்களின் 16 இலக்க விஐடி என்கிற விர்ச்சுவல் எண்ணை பயன்படுத்த வேண்டும். அதே போன்று, ஆதாரில் உங்கள் மொபைல் எண்ணை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்குமாறு UIDAI பரிந்துரைத்துள்ளது.

Also Read : அவசரகால மருத்துவ செலவா? PF தொகையில் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்

இவற்றுடன் உங்கள் சரியான மொபைல் எண் அல்லது மின்னஞ்சலை ஆதாருடன் இணைத்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இது ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க உதவும். ஒருவேளை நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், 1947 என்கிற டோல்-ஃப்ரீ எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் புகார்களை மின்னஞ்சல் செய்யலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Aadhaar card

அடுத்த செய்தி